Mnadu News

ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணம்: தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக மக்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை இன்று வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 பேர் என மொத்தம் 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 200 பேரை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends