Mnadu News

ராம்குமார் மரணம்: சுதந்திரமான விசாரணையுடன் ரூ.10 லட்சம் இழப்பீடு .

கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் கைது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதோடு, ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Share this post with your friends