கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, லாடம், மைனா, கும்கி, காடன் போன்ற தரமான, அழுத்தமான பதிவுகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் “பிரபு சாலமன்”.
மைனா, கும்கி படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றிகளுக்கு பிறகு அசுர வெற்றியை பதிவு செய்வதில் தடுமாறி வருகிறார் பிரபு சாலமன்.
கோவை சரளா, அஷ்வின் முன்னணி ரோல்களில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி உள்ளது “செம்பி”. இப்படம் வரும் டிசம்பர் 30 அன்று வெளியாக உள்ளது. இதன் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிரபு சாலமன் வாழ்வில் வெளிச்சத்தை கொடுக்கும் என நம்பலாம்.