நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் கந்தசாமி. இவர் கடந்த திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலை வழியாக அலுவலகத்திற்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனங்களை மடக்கி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவேல் தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த நகராட்சி ஊழியர் கந்தசாமியையும் நிறுத்தி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் கோபமடைந்த அவர், தான் நகராட்சி ஊழியர் எனத் தெரிவித்து அங்கிருந்த போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த அவர் மாலை 6 மணிக்கு மேல் இரண்டு துப்புரவு ஊழியர்களுடன், பேட்டரி வாகனத்தில் குப்பைகளை நிரப்பிச் சென்று, நாமக்கல் காவல் நிலையம் முன்பு கொட்டினாராம். அங்கு வந்த போலீஸார் சிலர் கந்தசாமியிடம் கேட்டபோது, பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டதால் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும், அரை மணி நேரத்திற்கு பின் வந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். அதனால், போலீஸாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையம் முன்பு தேங்கிக் கிடந்த குப்பைகளின் துர்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனர். இந்த நிலையில் தான் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன், நகராட்சி ஊழியர் கந்தசாமிக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் அங்கிருந்த போலீஸாருக்கு தெரியவந்தது. நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதாவிற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக குப்பையை அகற்ற உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமியை அழைத்து விசாரணை நடத்தினார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More