Mnadu News

ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்திய ‘பாப்’ பாடகி கைது:போலீசார் தீவிர விசாரணை.

அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதாகும் பிரபல பாப் இசை பாடகி ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா, சமூக வலைதளங்களில் பாப் பாடல் ‘வீடியோ’க்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளத்தில் இவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதேபோல், மாடல் அழகியாக உள்ள 30 வயதான மெலிசா டுபோர், டிசைனிங் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் சமூக வலைதளத்தில் சிறுமிகள், பெண்கள் உட்பட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில், ஹ_ஸ்டன் நகரில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்ற இருவரும், விலை உயர்ந்த சொகுசு காரில், அலபாமா நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அன்டியோலாவும், டுபோரும் உச்சக்கட்ட மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இவர்களின் காரை மறித்து சோதனை செய்தனர்.அப்போது, காரின் பின்புற பகுதியில் ரகசிய அறையில் பண்டல் பண்டலாக ‘கொகைன்’ எனப்படும் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர். இதன் மொத்த மதிப்பு 24 கோடியே 73 லட்சம் ரூபாய் ஆகும். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends