Mnadu News

ரூ.48 கோடி கடனுக்காக கடலூர் திமுக எம்.பி.க்கு சொந்தமான இடம் ஜப்தி.

கடலூர் தி.மு.க.,எம்.பி.ரமேஷ் தனது காய்தரி கேஷ்யூஸ் நிறுவனத்திற்காக பண்ருட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல்ஸ் வங்கியில் கடன் பெற்றார். கடனுக்காக வங்கியில் பண்ருட்டி சென்னை சாலை உள்ளிட்ட இடங்கள் அடமானமாக வழங்கியிருந்தார். கடன்தொகை கேட்டு வங்கி சார்பில் நோட்டீஸ் பலமுறை அனுப்பினர். அதோடு,தினசரி நாளிழதழ்களில் விளம்பரம் செய்தனர். ஆனால் பாக்கி நிலுவை தொகையை எம்.பி.ரமேஷ் செலுத்தவில்லை. இதனையடுத்து 48 கோடி ரூபாய் கடனுக்காக அடமானம் வைத்திருந்த சொத்துக்களை ஜப்தி செய்திட வங்கி சார்பில் நீதிமன்றத்தில்; முறையிட்டனர்.
இதனை விசாரித்த கடலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சொத்துக்களை ஜப்தி செய்திட உத்திரவிட்டது. இதனையடுத்து பண்ருட்டி சென்னை சாலை, எல்.என்.புரத்தில் எம்.பி.ரமேஷ் தந்தை வெங்கடாஜலம் செட்டியார் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக காலை 9:30 மணிக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். எம்.பி.ரமேஷ் ஆதரவாளர்கள் சிலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துணையுடன் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான அறிவிப்பு டிஜிட்டல் போர்டு வைத்தனர். கையகப்படுத்திய இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் தைலமரங்கள் , குடிசை வீடு ஒன்றையும் அகற்றினர். பின் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் எம்.பி.ரமேஷ் பெற்ற கடன் விபரம், கையகப்படுத்தும் நிலம் குறித்த தகவல்களை, வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர் ஆகியோரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். ஆனால் தகவல் தர மறுத்த அவர்கள் நீதிமன்றம் தான் தகவலை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Share this post with your friends