Mnadu News

ரூ.6 லட்சத்துக்கு விற்பனையான ஷாருக்கான் பெயருடைய ஆடு: பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விற்பனை.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்தையில் ஷாருக்கான் எனப் பெயரிடப்பட்ட 300 கிலோ எடையுடைய அஜ்மீரி இன ஆடு 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அந்த ஆட்டின் உரிமையாளரான இர்ஃபான் ஆக்ஹா, தான் வளர்க்கும் ஆடுகளுக்கு ஹிந்தி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இட்டு வளர்த்துள்ளார்.பதான், சுல்தான், ராஜ்குமார் போன்ற பெயருடைய ஆடுகளையும் வளர்த்து வருவதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.

Share this post with your friends