Mnadu News

ரூ.7 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை: நிதியமைச்சர் அறிவிப்பு.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வருமான வரி தொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்ட அறிபிப்பில்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாயில்; இருந்து ரூ.7 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தி, புதிய வரி விதிப்பு இனி பொதுவான வரி விதிப்பாக இருக்கும் என்று அறிவித்தார்.
அதோடு;, பொது பட்ஜெட்டில், வரி விதிப்பு வரம்புகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, தனிநபர் வருமா வரி விலக்கு வரம்பை 3 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தி வரி கட்டமைப்பையும் நிதியமைச்சர் மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தனிநபர் வருமான வரி விகிதத்தில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றம்.
பழைய வரிமுறையில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 3 லட்சம் ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை.
ஆண்டுக்கு ரூ.3 – 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிப்பு
ஆண்டுக்கு ரூ.6 – 9 லட்சம் வரை வருமானம் பெறுபோர் 10 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.9 – 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.12 முதல் 15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவிகித வரி விதிப்பு.
ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends