Mnadu News

ரேபிடோ பைக் டாக்சி’ விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ரேபிடோ நிறுவன செயலியை, ‘கூகுள், ஆப்பிள் ப்ளே’ ஸ்டோர்களில் இருந்து நீக்க, சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை செய்தது.,இதை எதிர்த்து, ரேபிடோ நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மாநகர காவல் துறை பரிந்துரையில் தவறில்லை’ என, தெரிவித்தது.இதை எதிர்த்து, 2019ஆம் ஆண்டு ரேபிடோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், மாநகர காவல் துறை உத்தரவுக்கு தடை விதித்தது.அதோடு, இந்த விவகாரத்தில், தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ சேவை தொடரவும் அனுமதித்தது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.,அப்போது தமிழக அரசு தரப்பில், ‘டில்லியில் பைக் டாக்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது’ எனக் கூறி, அதற்கான உத்தரவு நகல் தாக்கல் செய்தது. அத்துடன், காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More