Mnadu News

ரேஷன் கடைகளில் கருவிழி அடையாள முறை தொடக்கம்.

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும். அதோடு, பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார்.இந்நிலையில், தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends