கோவை பா.ஜ.க. வேட்பாளரும், தமிழக பா.ஜக. தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை. தமிழகத்தில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம். பா.ஜ.க. மீது கடந்த 50 ஆண்டுகளாக போலியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது உருவாக்கப்பட்ட பிம்பம் 2024 தேர்தலுக்கு பின் சுக்குநூறாக உடைந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.