Mnadu News

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்.இவரது பழைய கடையில் இருந்த மின் மீட்டரை புதுக் கடைக்கு மாற்றித்தருமாறு கடந்த 2009 இல் மணல்மேல்குடி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதற்கு, மணமேல்குடி மின்வாரிய அலுவலகத்தின் வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்த சண்முகசுந்தரம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத கல்யாணசுந்தரம் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி கல்யாணசுந்தரத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சண்முகசுந்தரத்தை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரெத்னா, குற்றம் சாட்டப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து சண்முகசுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Share this post with your friends