கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் எழுந்தது. இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லையில் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனினும் லடாக் எல்லைப் பிரச்சினை இன்றளவும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.இந்த சூழலில் கடந்த 23-ஆம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 18-வது சுற்று பேச்சுவார்த்தை லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ரஷிம் பாலியும், அவருக்கு இணை யான சீன ராணுவ உயரதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும், சீனாவும் சம்மதித்துள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More