ஜம்யாங் செரிங் தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4 புள்ளி ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட சின்குன் லா சுரங்கப்பாதையினை வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ஆயிரத்து 681 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனப் பதிவிட்டிருந்தார். லடாக்கின் பின் தங்கிய பகுதியான ஜன்ஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதோடு;, பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் எனவும் ஜம்யாங் பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டை இணைத்து டேக் செய்து பிரதமர் பதிவிட்டதாவது: லடாக் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More