Mnadu News

லட்சுமி யானையின் கற்சிலை அதிரடியாக அகற்றம்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29 ஆம் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைப்பயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது என்றும் அதனை அகற்றுமாறும் உத்தரவிட்டனர். ஆனால், சிலையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிலையை அகற்ற காலக்கெடு கொடுத்து விட்டு சென்றனர். போலீசார் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீத ரெட்டி தலைமையில் போலீசார் நேற்று இரவு லட்சுமி யானையின் சிலையை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், ஏற்கனவே கூறியபடியே சிலை அகற்றப்படுகிறது என்று போலீசார் கூறினர். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More