Mnadu News

லண்டன் அம்பேத்கர் இல்லம்: தன்வசப்படுத்த மத்திய அரசு முடிவு.

சட்டமேதை அம்பேத்கர், 1921 – 22 ஆண்டில்; ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் மேற்படிப்புக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், அங்கு கிங்ஸ் ஹென்றி சாலையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், 2015ல் அந்த வீட்டை, அதன் உரிமையாளர் விற்க முடிவு செய்தார். இதையடுத்து மஹாராஷ்டிர அரசு, அந்த வீட்டை 30 கோடி ரூபாய்க்கு வாங்கியது.,இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது. இதன்பின், அந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தற்போது அந்த வீட்டில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், அவரது புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், லண்டனில் உள்ள அந்த வீட்டை தங்களிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கும்படி மஹாராஷ்டிர அரசுக்கு, மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அந்த இல்லத்தை பராமரிக்கவும், அதில் அம்பேத்கர் நினைவை போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Share this post with your friends