வினோத் குமார் இயக்கத்தில், விஷால், சுனைனா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், ரானா தயாரிப்பில், பீட்டர் ஹெயின் ஸ்டண்டில் உருவாகி உள்ளது “லத்தி”. முற்றிலும் கமர்ஷியல் ஃபார்முலாவை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள், ஒரு மாஸ் மசாலா படம் என்பதை பதிவு செய்யும் வகையில் அமைந்து இருந்தது.

தமிழகத்தில் அயங்காரன் இன்டர்நேஷனல் இப்படத்தை வெளியிடுகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.