பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியாகி தமிழ், தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது லவ் டுடே. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.
பிரதீப் ரங்கநாதன் எழுதிய அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆக வெளியாகிய “சாச்சிடாலே” பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது இதன் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இப்படம் விரைவில் ₹100 கோடிகளை கிளப்பில் இணைய உள்ளது. அதே போல இன்னும் இரண்டு நாட்களில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் லவ் டுடே வெளியாக உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/18PCf6aq5wI