தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இந்திய அளவில் பிரபலமடைந்த திரைப்படம் “லவ் டுடே”. தற்கால காதலை மையமாக வைத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஸ்கிரீன் பிளே உடன் பொதுமக்களுக்கு பிடித்த வகையில் கொடுத்து வென்று காட்டி உள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் ₹48.90 கோடி. இதில் இயக்குனருக்கு ₹1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் இதில் நடித்த முன்னணி நடிகர்கள் சத்யராஜ் & ராதிகா சரத்குமார் ஆகிய இருவருக்கும் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பிரதீபை சுற்றி பல லீடிங் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அவரை அணுகி வருகின்றனராம். ஆனால், பிரதீப் கேட்கும் சம்பளம் ₹5 கோடிகள் என சொல்லப்படுகிறது.
