ஏ ஜி எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து, பாடல்கள் எழுதி உள்ள படம் “லவ் டுடே”. இவரோடு இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

கோமாளி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 5 வருடங்களுக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், படம் இன்று பல திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது.

இன்றைய வாழ்க்கை சூழலில் இரு காதலர்களுக்கு இடையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. இதை சுவாரசியமாக நகைச்சுவையோடு, பாடல்களோடு தந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர், நடிகர் பிரதீப்.

புதுமுக நடிகர் போல இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசிகர்களுக்கு ஃபான் உறுதி.