வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதற்கு திதி கொடுப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 35 பேர், ஒரு சரக்கு லாரியில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று விட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் முத்தூர் – காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே எதிரே வந்த மற்றொரு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More