Mnadu News

 லிப்டில் சிக்கிய மருத்துவ ஊழியர்கள்….திக் திக் நிமிடம்..! 

 தூத்துக்குடி காமராஜ் நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மாடியில் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளது.  இந்த மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு செல்ல லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று லேப் டெக்னீசியன்  முத்துமாரி, ஆரோக்கிய செல்வ மேரி ஆகிய இருவரும் லிப்டில் சென்றபோது லிப்ட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லிப்ட் இடைவெளியில் நின்றதால் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் லிப்டுக்குள் போராடினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் 15 நிமிடத்தில் இருவரையும்  பத்திரமாக உயிருடன் மீட்டனர். 

Share this post with your friends