லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனிகரில்லா நடிகையாக வலம் வருகிறார். எவ்வளவோ துயரங்கள், அவமானங்கள், துரோகங்கள் என அனைத்தையும் தாண்டி இன்று வரை நிலைத்து நிற்கிறார்.
வெறும் ஹீரோயினாக படங்களில் நடிக்காமல் முழு நீள நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுக்கும் இடம் தந்து, தனி சிங்கமாக பல படங்களை அவரே சுமந்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஜூன் மாதம் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெற்று அதன் பிறகு அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து துவங்கிய ரவுடி பேபி பிக்சர்ஸ் பல இயக்குனர்களை அறிமுகம் செய்வது மற்றும் நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரித்து வெளியிடுவதை செய்த வருகின்றனர்.
எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா லீட் ரோலில் நடித்துவரும் 81 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று நயன்தாரா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.