“அண்ணாத்த” திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “ஜெயிலர்”. சமீப காலங்களில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். அதே போல இளம் இயக்குனர்களோடு கூட்டணி அமைத்து இன்னும் அதே வசூல் சாம்ராட் ஆகவே உள்ளார்.
2.0, தர்பார் ஆகிய படங்களை தயாரித்த லைக்கா நடிகர் ரஜினிகாந்தை வைத்து இன்னும் இரண்டு படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தலைவர் சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு அதை ஓகே செய்து வைத்துள்ளார் என்றும், அடுத்த மாதம் அல்லது டிசம்பரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி, சிபி சக்கரவர்த்தி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கதைகளை சொன்ன இயக்குனர்கள் ஆவர். இதற்கு பிறகு ஒரு மாஸ் பிளான் சூப்பர் ஸ்டார் வைத்திருப்பதாகவும் அதுவும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.