மாநகரம் தந்த அறிமுகம்:
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் தரமான படைப்பு கொடுக்க முடியும் என நிகழ்த்தி காட்டியவர் லோகேஷ் கனகராஜ். இதன் திரைக்கதை, இயக்கம் பலருக்கும் பிடித்து போனது.

கைதியின் அசுர வெற்றி:
இந்த வெற்றியின் மூலம் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய “கைதி” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக லோகேஷ் கனகராஜ் யார் என்பதை பெரிய நடிகர்கள் கவனத்துக்கும் கொண்டு சென்றது. இதுவும் ஒரு சிறிய பட்ஜெட் படம் தான், ஆனாலும் இதன் திரைக்கதை ஓட்டம் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது.

விஜய்யின் சர்ப்ரைஸ் அழைப்பு :
இரண்டு படங்களையும் பார்த்த நடிகர் விஜய் உடனே தனக்கு கதை தயார் செய்ய சொல்லி, அப்படி அமைந்த படம் தான் “மாஸ்டர்”. கொரோனா ஊரடங்குக்கு பிறகு திரை அரங்குகளில் வெளியான முதல் தமிழ் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்தனர்.

உலக நாயகன் – லோகியின் விக்ரம் சம்பவம்:
லோகேஷ் திரை பிரபஞ்சம் என்கிற கான்செப்ட் ஐ உருவாக்கி அதில் சூரியா போன்ற ஒரு பெரிய நடிகரை நடிக்க வைத்து இன்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து அசத்தினார் லோகேஷ் கனகராஜ். இதன் மூலம் கமலின் நண்பராக மாறி இருந்தார் லோகேஷ்.

வரிசைகட்டும் டாப் ஹீரோக்கள்:
தொடர் வெற்றிகள் மூலம் எல்லா மொழிகளில் இருந்தும் பெரிய நடிகர்கள் இவரை அணுக துவங்கி உள்ளனர். மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்து தற்போது அவரின் 67 வது படத்தை இயக்க உள்ளார்.

விஜய் 67 அப்டேட்ஸ் எப்போது?
வரும் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் அப்டேட்ஸ் வரும் என லோகேஷ் கனகராஜ் உறுதியாக கூறி ரசிகர்களை மகிழ வைத்து உள்ளார். இதில் பல சர்ப்ரைஸ் அடங்கி உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
