Mnadu News

வகுப்புவாத உணர்வுகளை எதிர்க்கட்சிகள் தூண்டுகின்றன: பகவந்த் மான் குற்றச்சாட்டு.

அஜ்னாலா சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதல் அமைச்சர் பகவந்த் மான் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத பிரிவினை முயற்சியில் ஈடுபடுகின்றன. மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக செயல்படுவதன் மூலம் நெருப்புடன் அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகள் பஞ்சாபின் அமைதியை ஒரு போதும் பாதிக்காது. பஞ்சாபில் துறவிகள், குருக்கள், இஸ்லாம் மத குருக்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தின் அமைதியை அரசு பாதுகாக்கும் என்றார்.பஞ்சாபில் கடந்த மாதம் அஜ்னாலாவில் சீக்கிய மத பரப்புரை செய்பவர் எனக் கூறிக்கொள்ளும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் வாள்களை ஏந்தி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டு விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends