வங்கதேச நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலில், “பங்களாதேஷின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபால்கஞ்ச் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி எட்டு ஆக பதிவாகி உள்ளது. 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக இதுவரை தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More