Mnadu News

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் பேட்டி.

ஊழல் தடுப்பு தொடர்பான ஜி 20 நாடுகளின் நான்கு நாள் கூட்டம் குருகிராமில் துவங்கியது. இந்த கூட்டத்தில் ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.இந்த மாநாட்டில் பேச வேண்டியது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங,;வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, இந்த நான்கு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். சர்வதேச அளவில் பொருளாதார குற்றத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.வங்கி மற்றும் நிதிசார்ந்த நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில், 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு பணமோசடிகள் நடந்துள்ளன.குற்ற செயல்கள் செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு சென்று விடும் குற்றவாளிகளை சொந்த நாட்டிற்கு வரவழைத்து, விரைவாக விசாரணை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பண மோசடி சம்பவங்கள் தடுக்க முடியும். என்று அவர் பேசினார்.

Share this post with your friends