இரு நடிகர்கள் இணைந்து (ரமணா மற்றும் நந்தா) முதல் முறையாக தயாரிக்கும் பான் இந்தியா திரைப்படம் விஷால் மற்றும் சுனைனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி உள்ளது “லத்தி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பீட்டர் ஹீன் ஸ்டண்ட் இயக்கத்தில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
22 ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ₹7 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது இதனால் லத்தி பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி தோல்வியை சந்தித்து உள்ளது.
தொடர்ச்சியாக 7 தோல்வி படங்களை விஷால் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் விஷால் உள்ளார் என்றும் இனி கதைகளை சரியாக தேர்வு செய்து நடிக்க அவர் திட்டமிட்டு உள்ளார் என கூறப்படுகிறது. அதே போல எப்படியாவது ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என தீவிரமாக இறங்கி உள்ளார்.