சர்தார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி திரை அரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மித்ரன் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் தீமை குறித்து கமர்சியல் கலந்து சொல்லப்பட்டது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் கார்த்தி இந்த வருடத்தில் பதிவு செய்துள்ள மூன்றாவது வெற்றி இதுவாகும்.
வரும் வாரங்களில் பெரிய படங்கள் எதுவும் வராதது சர்தார் படத்துக்கு பிளஸ் என திரை அரங்கு உரிமையாளர்கள் கருதுகின்றனர். இந்த படத்தின் மூலம் அவர்களும் நல்ல லாபம் பார்த்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
இப்படம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கிறது. இதன் வசூல் ₹80 கோடிகளாகும். இன்னும் சில நாட்களில் ₹100 கோடி கிளப்பில் இப்படம் இணைவது உறுதி.