Mnadu News

வடகிழக்குப் பருவமழைக்கு 2 பேர் பலி: தலா ரூ.4 லட்சம் இழப்பீடு .

இழப்பீடு குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரும் என இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
அதோடு, வடகிழக்குப் பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. பருவமழையை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் வழக்கமான மழை பாதிப்புகள் உள்ளது. நீரை வெளியேறும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
எந்த இடங்களில் பிரச்னை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி அதைச் சரிசெய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends