சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, தமிழகத்தில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றார். சிட்ரஸ் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் மாதம் 4- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு இயல்பை விட 45 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More