அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி திரைப் படம் வடமாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் நாயகி அடா ஷர்மா, “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இதுவரை 68 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More