Mnadu News

வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை: பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் காட்டம்.

தமிழகத்தில் பணியாற்றும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல இரு விடியோக்கள் சில நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. முக்கியமாக இந்த விடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.இதையறிந்த தமிழக காவல்துறை, அந்த விடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான விடியோ குறித்து அம்மாநில துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான விடியோக்கள் போலியானவை.பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள விடியோக்கள் போலி என தமிழக டிஜிபி விளக்கமளித்துள்ளார்.வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் ஏன் தவறாக வழிநடத்துகிறார்கள்? இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றார். இதனிடையே பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More