Mnadu News

வதந்திகளை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம்: சிராக் பஸ்வான் வேண்டுகோள்.

பீகாரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பஸ்வான் எம்.பி., பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.பீகார்-தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். வலைதளங்களில் போலியான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று சிராக் பஸ்வான் கூறினார்.இதனைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சிராக் பஸ்வான், ஆளுநரை சந்தித்து புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்னைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்தார்.

Share this post with your friends