ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடி தலைமையிலான அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய யுக்திகளையும், புதிய தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இதனால் வந்தே பாரத் ரயில்கள் 3 வடிவில் வர உள்ளன. இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத், மெட்ரோ வந்தோ பாரத் மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் என்ற வடிவில் வர உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வந்தே மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் ரயில்களில் இருந்து மாறுபடும் வந்தே மெட்ரோ ரயில்கள், நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதுடன், சுகமான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More