Mnadu News

வனத்தில் சட்டவிரோத விடுதிகள் :நடவடிக்கை இல்லை,உயர் நீதிமன்றம் அதிருப்தி.

மேகமலையில் சட்டவிரோத விடுதிகளை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக விடுதிகள் அமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்றும் இவ்வாறு அமைக்கப்படும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர் நீதிமன்றக் கிளை அதிருப்தி தெரிவித்து உள்ளது. அதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டுமானத்தின் ஆவனங்களை ஆய்வு செய்து விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என்று தெரிவிக்க் உத்தரவிட்ட நீதிமன்றம், விடுதியா அல்லது தொழிலாளர் குடியிருப்பா என ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை உயர் நீதிமன்றக் கிளை நியமித்துள்ளது. தேனி வனத்துறை அலுவலருடன் இணைந்து வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தேனி ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends