ராமநாதபுரம் மோர்ப்பண்ணை தீரன் திருமுருகன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,மத்திய அரசு வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களவை இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.வனப் பாதுகாப்பு சட்டம் இந்தியா முழுவதும் பொருந்தும். எனவே, மசோதாவை தமிழில் வெளியிட வேண்டும். கருத்து தெரிவிப்பதற்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும். கருத்துக்களை தமிழில் அனுப்புவதை ஏற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த,பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மனுதாரர் கருத்துக்களை சம்பந்தப்பட்ட குழுவிற்கு தமிழில் அனுப்பலாம் என்று கூறி விசாரணையை ஒருவாரத்திற்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More