தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பெரியகுளம் சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்தும், உண்மை குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அலெக்ஸ் பாண்டியனை சிறையில் அடைத்தது குறித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.