Mnadu News

வருமான வரி தாக்கலுக்கு ஒரே படிவம்:நிதியமைச்சகம் பரிந்துரை.

தற்போது, வருமான வரித் தாக்கலுக்கு பல்வேறு பிரிவினருக்கு ஏற்ப 7 படிவங்கள் நடைமுறையில் உள்ளன. புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே படிவ முறையில், மின்னணு முறையில் உள்ள சொத்துகளைத் தெரிவிக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது.
அறக்கட்டளைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தவிர வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் மற்ற அனைவரும் இந்த ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்த முடியும்.
இப்போதைய நிலையில் ஐடிஆர் படிவம் 1 (சகஜ்), ஐடிஆர் படிவம் 4 (சுகம்) ஆகியவை சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் உள்ள வருமான வரி செலுத்துவோர் அதிகம் பயன்படுத்துவதாக உள்ளது. 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் தனிநபர்கள், வீடு உள்ளிட்ட சொத்துகள், வட்டி மூலம் வருமான பெறுவோர் சகஜ் படிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரே படிவ முறை நடைமுறைக்கு வந்தாலும், ஏற்கெனவே உள்ள 1 முதல் 4 படிவங்களும் நடைமுறையில் இருக்கும். தனிநபர்கள் தேவைக்கு ஏற்பட ஒரே படிவ முறையைத் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

Share this post with your friends