Mnadu News

வரும் 31-ஆம் தேதி வரை மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம்: அமைச்சர் தகவல்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
இன்று காலை 11 மணி நிலவரப்படி 2.66 கோடி நுகர்வோரில், 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலமாக சுமார் 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பிரிவு அலுவலகங்களில் தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 52 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் சிறப்பு முகாம்கள் நடையெபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச., 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது என்று கூறினார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More