வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதேசமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More