சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதிப்புகளைத் தடுப்பதற்காக வழிமுறைகள் குறித்தும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இதில் கலந்துகொண்டு பேசிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், நியூசிலாந்து நாடு புயலால் பெரும் துயரை சந்தித்து வருகிறது. இதுபோன்று உலகம்முழுக்க பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இனி வரும் மாதங்களில் கடும் வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய ஆய்வு மையம் தெரித்துள்ளது. புதிய புதிய நோய்களையும் சந்திக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.கடந்த டிசம்பர் மாண்டஸ் புயல் கரையை கடந்தபோதுதான் காலநிலை மாற்றக் குழு உருவாக்கப்பட்டது. வருமுன் காக்கும் அரசாக திமுக செயல்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுட்தும் வகையில், காலநிலை அறிவு இயக்கம் தொடங்கப்படும். தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையும் என்பதை காலநிலை மாற்றக் குழு தீர்மானிக்கும். வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் இன்னொரு கண். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் காலநிலை மாற்ற கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More