இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சார் பணிகளை நிறைவேற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பணியில் இணைந்துள்ளனர்.இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினர், பிரஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், சிறுமி ஒருவர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கை கைவிட வேண்டும் என்றும் டெல்லி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், பிரஜ் பூஷண் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More