மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 ரூபாயை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.பின்னர் வசந்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வசந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More