Mnadu News

வழுக்கி விழுந்த சசிதரூர்: கால் கட்டுடன் பகிர்ந்த படம் வைரல்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நாடாளுமன்றத்தில் இருக்கையில் இருந்து வெளியேறி அமளியில் ஈடுபட்டபோது, படிக்கட்டில் இடறி விழுந்துள்ளார். இதனால் காயமடைந்த அவர், கடும் வலியின் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் கட்டுடன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை சுட்டுரையில் அவர் பகிர்ந்துள்ளார். படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, சற்று சிரமமாக உணர்கிறேன். நாடாளுமன்ற படியில் இடறி விழுந்தபோது எனது காலில் சுளுக்கு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்ததால், அதனை பொருட்படுத்தாமல் இருந்தேன். ஆனால், வலி நேரமாக நேரமாக அதிகமாக இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது என்னால் நகர முடியவில்லை. இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் எனது வார இறுதி திட்டங்களை ரத்து செய்துவிட்டேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends