Mnadu News

வாக்குகளைப் பெற சிபிஐ- அமலாக்கத்துறை பாஜகவுக்கு உதவாது: மம்தா கடும் தாக்கு

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்ஷேர்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா,2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் பெரும் பிரச்னையாக உள்ள கங்கை அரிப்புக்கு மாநில நிர்வாகம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றார்.அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெற சிபிஐயையும், அமலாக்கத்துறையும் பாஜகவுக்கு உதவாது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends