Mnadu News

வாக்கு வங்கி அரசியலின் அடிமையாக காங்கிரஸ் மாறி வருகிறது: பிரதமர் மோடி விமர்சனம்.

கர்நாடக மாநிலம் துமகுருவில் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்திப்படுத்தலுடன் கூடிய வாக்கு வங்கி அரசியலின் அடிமையாக காங்கிரஸ் மாறி வருகிறது. அத்தகைய காங்கிரஸால் கர்நாடக மக்களுக்கு ஒருபோதும் நன்மை செய்ய முடியாது. அப்படிப்பட்ட காங்கிரஸால் கர்நாடகத்தை ஒருபோதும் வளர்ச்சியடையச் செய்ய முடியாது. கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகளை விட கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியரசு செய்துள்ள அதே சமயம் செய்யவுள்ள பணிகள் அதிகம்.தற்;போது மக்களிடையே வாங்கும் சக்தி உயர்ந்துள்ளதால் சமூகம் சமநிலையை அமைந்து வருகிறது.நாங்கள், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம். அதாவது, பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் விவசாயிகளின் கணக்குகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ருபாயை செலுத்தி உள்ளோம்.அதுமட்டும் இன்றி துமகுருவில் உள்ள விவசாயிகளுக்கு 700 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்கப்;பட்டுள்ளது என்று உiயாற்றி உள்ளார்.

Share this post with your friends