ரஷ்யாவில் இருந்து வாக்னெர் படைத் தலைவர் பிரிகோஷின் வெளியேறி, பெலாரசில் தஞ்சமடைவார் என்றும், அவர் மற்றும் அவரது தனியார் ராணுவ அமைப்பின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் உள்நாட்டு புரட்சி, அதிபர் புடினுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.தற்போதைக்கு உள்நாட்டில் பெரும் கலவரம் ஏற்படுவது தடுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால் என்ன செய்வது என்ற ஆலோசனையில் புடின் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால், பெலாரசில் பிரிகோஷின் தஞ்சமடைந்தாலும், அவர் மீதான வழக்குகள் தொடரும் என, ரஷ்ய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.தற்போதைய நிலையில், வாக்னெர் படை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால், அதில் உள்ள வீரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More