அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப்’ என்ற சேவையின் கீழ் பயனர்கள் தங்களிடம் உள்ள 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அமேசான் டெலிவரி பிரதிநிதிகளிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் கேஒய்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு, கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப் சேவையின் மூலம் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் பயனர்கள் பலன் பெறலாம்.அத்துடன், கேஷ்-ஆன்-டெலிவரி மூலம் அமேசான் தளத்தில் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், அந்த பொருளுக்கான தொகை போக தங்கள் கையில் உள்ள கூடுதல் தொகையை பிரதிநிதிகளிடம் கொடுத்து, அதனை வாடிக்கையாளர்களின் அமேசான் பேவிற்கு கிரெடிட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் வாடிக்கையாளர்கள் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More